Cooking / Samayal Tips # 33
1. சூப் செய்ய சோள மாவு தான் தேவை என்பது இல்லை. 2 ஸ்பூன் ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து நன்றாக பொடி செய்து சூப்பில் சேர்த்தால் 'திக்' காகவும் இருக்கும், சத்தும் அதிகம். Its not necessarily be Corn Flour to be used for soup. Dry saute 2 tsp Javvarisi, powder it and add to the soup, which will get thickened and good for health too. (Diabetes patients please avoid this Tip)
2) பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும். Before applying butter over bread, mix butter in little milk and beat well. Applying butter would be easy and less butter can be used too.
3) சட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ராய்த்தா தயார். Fine chop onion and top up with Karaboonthi in left over coconut chutney and add curd and mix well. Adjust salt. A special Onion+chuntey Raitha is ready to serve for main dish.
4) வத்தல் குழம்பு அல்லது காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலையே வேண்டாம். ஒரு தேங்காய் மூடி துருவி அதில் இருந்து பால் எடுத்து, குழம்பில் விட்டு இறக்கி விடுங்கள். காரம் குறைவதுடன், சுவையும், மனமும், அபாரமாக இருக்கும். If you find excess spicyness in Karakuzmbu or vathal kuzhambu, add coconut mill and remove from gas. The spicy level would reduced, taste and aroma would be perfect.
5) To have a perfect aroma and perfect taste of Tea (which ever brand you use)... always simmer the flame afer adding the Tea powder / Tea leaves in the boiling water. Never let it boil in full temperature. Switch off the gas and wait for a minute and filter the decoction.
6) Sometimes, we get new rice, which when cooked in pressure cooker becomes mushy. To get a non-sticky cooked rice, add 1 tsp of cooking oil in the rice and pressure cook. You will get a perfect cooked rice.
7) கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும். (Those who are lack of Cashewnuts for gravy, can substitute adding soaked peanuts to the gravy)
8) பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும். To avoid ripening of Bittergourd, cut on both edges, slice on the middle and keep it, which will last fresh for more days.
9) கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போன்றவற்றை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாது. If we keep coriander & curry leaves in an aluminium foil and stored in fridge, it would last for longer days.
10) எலுமிச்சை பழத்தை தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும் If you slightly warm the Lemon on the gas stove, you will find easy to squeeze the lemon.
11) தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. Remove skin of ginger and mash it. Add this to the Fresh curd. This will stop curd turning to sourness.