Scroll News

Welcome to Aaharam..... Install our Aaharam Mobile App to get all our Products to Door-Step

Thursday, 29 October 2015

Ginger Thokku

Posted by Mrs. Prema Kannan on 29/10/2015

Inji Thokku : 

Inji - 1/4 kg 
Puli - 150 gms
Salt - less than 1/4 azhaakku
Chilli pdr - 1/2 azhaakku
Jaggery - 1/2 azhaakku
Gingelly oil - 1/2 azhaakku. 

Method : 
Remove all the impurities frm puli nd soak in boiled water fr half an hour.
2 . Clean inji nd slice it.
3 . Grind coarsely nd keep aside.
4 . Now grind the remaining ingredients. 
5 . Finally put tge coarsely ground inji nd jus gv one round.
6 . Heat oil nd put this paste , switch off the stove nd mix well.
To retain the colour v shd not keep this in the stove. Jus heat oil nd mix thats all 


Wednesday, 28 October 2015

International Brahmins Cuisine Day

CELEBRATE INTERNATIONAL BRAHMINS CUISINE DAY 
ON 01-11-2015



Morekuzhambu

Posted by Muralidharan Varadharajan on 27/10/2015

மோரக்குழம்பு : 

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் துவரம் பருப்பு, சீரகம், ஒரு சிட்டிகை அரிசி ஒரு மணி நேரம் உற வைத்து அரை மூடி தேங்காய் துறுவல், 3 பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும. ஒரு வானலியில் கடுகு, துளியூண்டு பெருங்காயம, தாளித்து 5/6 வெண்டைக்காயை நறுக்கி போட்டு கறுப்பாக வதக்கி அதனுடன் அரைத்த. விழுதையும், 2 கப் கெட்டி தயிரை கொஞ்சம் தண்ணி சேர்த்து சிலுப்பி ஊற்றி, கருவேபப்பிலை போட்டு கொதி வந்ததும இறக்கினால் அருமையான மோர்குழம்பு ரெடி

Tomato Rasam

Posted by Muralidharan Varadarajan on 27/10/2015

தக்காளி ரசம :
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியை நன்றாக கரைத்து புளி தண்ணீரை ஊற்றி, 3 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, 2 பச்சை மிளகாய் நீள வாக்கில் நறுக்கி போட்டு, கொஞ்சம் இஞ்சியையும் பொடியாக நறுக்கி போட்டு, சற்று தூக்கலாக பெருங்காயம, மஞ்சள் பொடி, போட்டு தேவையான அளவு உப்பு போட்டு புளி வாசனை போகும் வரை கொதிக்க விட்டு வெந்த துவரம் பருப்பு கலந்த பருப்பு நீரை ஊற்றி நன்றாக கொதிககும் போது 4 ஸ்பூன் ஆஹாரம் ரசப்பொடி போட்டு அதனுடன் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி போட்டு இறக்கி ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு பெ.ருங்காயம் தாளித்து கொட்டினால மணக்க மணக்க தக்காளி பருப்பு ரசம் ரெடி.

Kathirikkai Pitlai

Posted by Muralidharan Varadharajan on 27/10/2015

கத்திரிக்காய் பிட்ளை :: கால் கிலோ சிவப்பு கொத்து கடலையை இரவே நிறைய தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்  காலையில் ஒரு குக்கரில ஊற வைத்த கடலையை போட்டு அதனுடன் ஒரு பெரிய டம்ளர் துவரம் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி போட்டு மூடி 4/5 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.  அரை கிலோ கத்திரிக்காயை நாலாக வெட்டி பாத்திரத்தில் போட்டு, கத்திரிக்காய் மூழ்கும் அளவு புளிகரைத்து ஊற்றி, சிறிது மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் சாம்பார பொடி போட்டு கொதிக்க விடவும்.  வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் தனியா, கொஞ்சம் கடலை பருப்பு, சிவப்பு மிளகாய் போட்டு வறுத்து அரை மூடி தேங்காயை துறுவி மிக்ஸியில் போட்டு கற கறவென்று அரைதத்து அதை கொதிக்கும் கத்திரிக்காயுடன் சேர்த்து நன்றாக கிளறி அதடன் வெந்த பருப்பையும் கடலையையும் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்க விடவும், குழம்பு சிறிது கெட்டியானதும கருவேப்பிலை தேவையான உப்பு போட்டு இறக்கி அதில கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு பெருங்காயம், 4 மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து கத்திரிக்காயுடன்சேர்த்து இறக்கினால் கத்திரிக்காய் பிட்ளை ரெடி

Variety Rice

Posted by Muralidharan Varadharajan on 27/10/2015

கலந்த சாதம் : வானலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு, பெருங்காயம, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, உரித்த வேர்கடலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , 4 சிவப்பு மிளகாய, கொஞ்சம் கருவேப்பிலை போட்டு வறுத்து அதனுடன அரை மூடி தேங்காயை சன்னமாக துறுவி போட்டு நன்றாக. வறுத்து இறக்கவும் அதனுடன் உதிராக வெடித்த சாதம் தே வையான அளவு போட்டு உப்பு கலந்து நன்றாக கலந்தால் தேங்காய் சாதம் ரெடி

Pickles

Posted by Muralidharan Varadarajan on 27/10/2015

ஊறூகாய் :   5 தக்காளியை பொடி பொடியாக நறுக்கி , ஒரு  வானலியில் கொஞ்சம் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், 4 சிவப்பு  மிளகாய் தாளித்து தக்காளியை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் பொடி (கலருக்காக),  தேவையான உப்பு போட்டு நன்றாக தக்காளியை மசிய கிளறி இறக்கினால் தக்காளி ஊறுகாய் ரெடி

Sweet

Posted by Muralidharan Varadarajan on 27/10/2015

ஸ்வீட்  வானலியில் 3/4 ஸ்பூன் நெய்விட்டு உருகியதும் ஒரு டம்ளர் கடலை மாவு போட்டு மாவு வாசனை வரும் வரை வருத்து எடுத்து வைக்கவும்.  அதே வானலியில் அரை லிட்டடர் திக்கான (ரெட் ஆவின் பால்) ஊற்றி கொதி வந்ததும் 4 கப் சர்க்கரை போட்டு கரைந்ததும் மேலாக பூ போல் மிருதுவாக துருவிய அரை மூடி தேங்கிய் துருவலை போட்டு  கிளறி அதனுடன் வருத்து வைத்துள்ள மாவையும் போட்டு நன்றாக கட்டி தட்டாமல் கிளறி கால் டம்ளர் நெய் ஊற்றி நன்றாக கலந்து மேலும் அரை டம்ளர் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நெய் கக்கி பபுள்ஸ் வரும் வரை கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் தேவையான வடிவத்தில் கட் செய்


Aamai Vadai

ஆம வடை :    2 கப் கடலை பருப்பு,  அரை கப் துவரம் பருப்பு  போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்,   ஊறியவுடன் நன்றாக தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு போட்டு  5/6 சிவப்பு மி ளகாய் போட்டு 2 சுத்து சுத்தி அரைத்துகொள்ளவும்.  வானலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் தட்டி எண்ணையில் போட்டு சிவக்க வறுத்து எடுத்தால் ஆமவடை ரெடி
அப்பளாம் :  வானலியில் எண்ணை வைத்து காய்ந்ததும் அப்பளத்தை  போட்டு பொறித்து எடுத்தால் அப்பளாம் ரெடி

Avial

Posted by Muralidharan Varadharajan on 27/10/2015

அவியல் :   கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சௌசௌ,   வாழைக்காய், முருங்கைகாய் எல்லாவற்றையும்  அளவாக எடுத்து 2 இன்ச் அளவில் நீளவாக்கில் நறுக்கி,  குக்கரில் போட்டு காய்கறி அளவுக்கு கீழ் தண்ணி ஊற்றி காய்கறிக்கு தேவையான உப்பு போட்டு 2 விசில்   விட்டு இறக்கவும்  முமூ தேங்காயை  துறுவி அதனுடன் 4 பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து காய்கறியுடன் போட்டு, 2 கப் கெட்டி தயிரை அப்படடியே சிலிப்பி ஊற்றி கொதி வந்ததும் கருவேப்பிலை போட்டு, சுத்தமான தேங்காய் எண்ணை கொஞ்சம் ஊற்றி கிளறி இறக்கினால் அவியல் ரெடி 

Saturday, 24 October 2015

Hotel Sambar

Please find below video link of Aaharam Recipes - Hotel Sambar


Diwali Gift Pack

Aaharam launches Deepawali Gift pack consisting of A1-Grade, purest and tastiest Cashew-nuts and with a Sweet box, in a Gift box, which is ideal for gifting near and dear. Ideal for Corporate gifts also. 

1 Pack = Rs.150/-. + Shipping from pondicherry

20 Pack = 3000/- (FREE SHIPPING)

50 Packs and above = Customised Gift Label + FREE Shipping.

Hope this Deepawali would be a Memorable with 
Aaharam Deepawali Gift Pack. 

THANK YOU ALL IN ADVANCE.


Cabbage Coconut Curry

[24/10, 5:38 AM] Muralidharan Varadharajan: 

கோஸ் தேங்காய் கறி : 

அரை கிலோ கோசை கேரட் துறு வலில் துறுவி, வானலியில் 2 டம்  ளர தண்ணீர் ஊற்றி அதில் துறுவிய கோசை போட்டு மூடி பத்து நிமிடம் வேகவைத்து வடிகட்டியில் போட்டு நன்றாக ஆற விடவும். வானலியில் சிறிது எண்ணை ஊற்றி் கடகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து அதில் கோசை போட்டு கிளறி, அரை மூடி தேங்காயை துறுவி போட்டு பிரட்டி இறக்கினால உதிர் உதிராக கோசு தேங்காய் கறி ரெடி

Curry - Potato

[23/10, 11:16 PM] Muralidharan Varadharajan: 

உருளை கார கறி  5/6 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும் , ஆறியதும் தோல் உறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும.  ஒரு வானலியில் கொஞ்சமாக எண்ணை ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை ,  உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக ரோஸ்ட் பன்னி கறிப்பொடி உப்பு  போட்டு கிளறி இறக்கினால்   உ.ருளை கார கறி ரெடி

Kosumalli

கோஸ்மல்லி  ஒரு கைபிடி பயித்தம் பருப்பை வெந்நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை நன்றாக வடிகட்டி அதில் பொடியாக நறுக்றுகிய ஒரு பச்சை மிளகாய, கொஞ்சம் துறுவிய கேரட், தேங்காய், மாங்காய், உப்பு போட்டு, கடுகு தாளித்து கலந்தால் கோஸ்மல்லி ரெடி

Posted by Muralidharan Varadharajan on 24/10/2015

Pachadi - ஸ்வீட் பச்சடி

Posted by Muralidharan Varadharajan on 24/10/2015

ஸ்வீட் பச்சடி.  

இரண்டு தக்காளியை நன்றாக தள தள வென்று கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடம் மூடி வைத்து ஆறியவுடன் தோல் உறித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும் ஒரு வானலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு  கரண்டி சர்க்கரை போட்டு நன்றாக கரைந்ததும் அரைத்த தக்காளி விழுதை போட்டு பத்து நிமிடம் கிளறி இறக்கி அதனுடன் துண்டுகளாக நறுக்கிய முந்திரி, ஆப்பிள், மலை வா ழைப்பழம, பச்சை திராட்ச்சை சேர்த்து கிளறினால் ஸ்வீட் பச்சடி ரெடி

Pachadi - தயிர் பச்சடி

Posted by Muralidharan Varadarajan
on 24/10/2015

தயிர் பச்சடி  

வெள்ளரிக்காயை தோல் சீவி துறுவி கொள்ளவும் அதனுட ன் ஒரு பெங்களூர் தக்காளியை பொடியாக நறுக்கி போட வும் மிக்ஸியில் கொஞ்சம் தேங்காய் துறுவல், ஒரு பச்சை  மிளகாய் போட்டு அரைத்து வெள்ளரியுடன் சேர்த்து புளிக்காத  கெட்டி தயிர், உப்பு கலந்து கடுகு பெருங்காயம் தாளித்து கொத்துமல்லி தூவி கலந்தால் தயிர் பச்சடி ரெடி

Paal Payasam - பால் பாயசம்

Posted by Muralidharan Varadarajan
24/10/2015

பால் பாயசம் : 

ஒரு குக்கரில் மூன்று லிட்டர் பால் ஊற்றி அதனுடன் கைபிடியளவு பாசுமதி அரிசி நன்றாக களைந்து போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் அடி பிடிக்காமல் அவ்வபொழுது கிளறி கொண்டே பால் மூன்றில் ஒரு பங்காக வரும் வரை கினறவும், பிறகு அதனுடன் கால் கிலோ சர்கரை போட்டு கரைய விடவும் பால் நன்றாக காய்ந்து வெளிர் பிரவுன் கலராக மாறியவுட.ன் அதனுடன் 150 கிராம் மிலக்மெய்டு ஊற்றி நன்றாக கலந்து இறக்கி விடவும்
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பத்து பாதம் பருப்பை போட்டு 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி பருப்பு ஆறியவுடன தோலn் உறித்து நீளவாக்கில் துண்டுகளாக ந றுக்கி, நூறு கிராம் இரண்டாக உடைத்த முந்திரி பருப்பையும் ஒரு கடாயில் நெய் ஊற்றி இரண்டையும் பொன்னிறமாக வறுத்து அதை சுன்டிய பாலுடன் கலந்து, கொஞ்சம் ஏலப்பொடி கொஞ்சம் குங்கும பூ கலந்து  இறக்கினால் பால் பாயசம் ரெடி