Variety Rice

Posted by Muralidharan Varadharajan on 27/10/2015

கலந்த சாதம் : வானலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு, பெருங்காயம, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, உரித்த வேர்கடலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , 4 சிவப்பு மிளகாய, கொஞ்சம் கருவேப்பிலை போட்டு வறுத்து அதனுடன அரை மூடி தேங்காயை சன்னமாக துறுவி போட்டு நன்றாக. வறுத்து இறக்கவும் அதனுடன் உதிராக வெடித்த சாதம் தே வையான அளவு போட்டு உப்பு கலந்து நன்றாக கலந்தால் தேங்காய் சாதம் ரெடி