Posted by Muralidharan Varadharajan on 27/10/2015
கத்திரிக்காய் பிட்ளை :: கால் கிலோ சிவப்பு கொத்து கடலையை இரவே நிறைய தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் காலையில் ஒரு குக்கரில ஊற வைத்த கடலையை போட்டு அதனுடன் ஒரு பெரிய டம்ளர் துவரம் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி போட்டு மூடி 4/5 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். அரை கிலோ கத்திரிக்காயை நாலாக வெட்டி பாத்திரத்தில் போட்டு, கத்திரிக்காய் மூழ்கும் அளவு புளிகரைத்து ஊற்றி, சிறிது மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் சாம்பார பொடி போட்டு கொதிக்க விடவும். வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் தனியா, கொஞ்சம் கடலை பருப்பு, சிவப்பு மிளகாய் போட்டு வறுத்து அரை மூடி தேங்காயை துறுவி மிக்ஸியில் போட்டு கற கறவென்று அரைதத்து அதை கொதிக்கும் கத்திரிக்காயுடன் சேர்த்து நன்றாக கிளறி அதடன் வெந்த பருப்பையும் கடலையையும் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்க விடவும், குழம்பு சிறிது கெட்டியானதும கருவேப்பிலை தேவையான உப்பு போட்டு இறக்கி அதில கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு பெருங்காயம், 4 மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து கத்திரிக்காயுடன்சேர்த்து இறக்கினால் கத்திரிக்காய் பிட்ளை ரெடி