Posted by Muralidharan Varadarajan on 27/10/2015
தக்காளி ரசம :
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியை நன்றாக கரைத்து புளி தண்ணீரை ஊற்றி, 3 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, 2 பச்சை மிளகாய் நீள வாக்கில் நறுக்கி போட்டு, கொஞ்சம் இஞ்சியையும் பொடியாக நறுக்கி போட்டு, சற்று தூக்கலாக பெருங்காயம, மஞ்சள் பொடி, போட்டு தேவையான அளவு உப்பு போட்டு புளி வாசனை போகும் வரை கொதிக்க விட்டு வெந்த துவரம் பருப்பு கலந்த பருப்பு நீரை ஊற்றி நன்றாக கொதிககும் போது 4 ஸ்பூன் ஆஹாரம் ரசப்பொடி போட்டு அதனுடன் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி போட்டு இறக்கி ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு பெ.ருங்காயம் தாளித்து கொட்டினால மணக்க மணக்க தக்காளி பருப்பு ரசம் ரெடி.