Posted by Muralidharan Varadharajan on 27/10/2015
அவியல் : கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சௌசௌ, வாழைக்காய், முருங்கைகாய் எல்லாவற்றையும் அளவாக எடுத்து 2 இன்ச் அளவில் நீளவாக்கில் நறுக்கி, குக்கரில் போட்டு காய்கறி அளவுக்கு கீழ் தண்ணி ஊற்றி காய்கறிக்கு தேவையான உப்பு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும் முமூ தேங்காயை துறுவி அதனுடன் 4 பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து காய்கறியுடன் போட்டு, 2 கப் கெட்டி தயிரை அப்படடியே சிலிப்பி ஊற்றி கொதி வந்ததும் கருவேப்பிலை போட்டு, சுத்தமான தேங்காய் எண்ணை கொஞ்சம் ஊற்றி கிளறி இறக்கினால் அவியல் ரெடி