Posted by Muralidharan Varadarajan
24/10/2015
24/10/2015
பால் பாயசம் :
ஒரு குக்கரில் மூன்று லிட்டர் பால் ஊற்றி அதனுடன் கைபிடியளவு பாசுமதி அரிசி நன்றாக களைந்து போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் அடி பிடிக்காமல் அவ்வபொழுது கிளறி கொண்டே பால் மூன்றில் ஒரு பங்காக வரும் வரை கினறவும், பிறகு அதனுடன் கால் கிலோ சர்கரை போட்டு கரைய விடவும் பால் நன்றாக காய்ந்து வெளிர் பிரவுன் கலராக மாறியவுட.ன் அதனுடன் 150 கிராம் மிலக்மெய்டு ஊற்றி நன்றாக கலந்து இறக்கி விடவும்
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பத்து பாதம் பருப்பை போட்டு 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி பருப்பு ஆறியவுடன தோலn் உறித்து நீளவாக்கில் துண்டுகளாக ந றுக்கி, நூறு கிராம் இரண்டாக உடைத்த முந்திரி பருப்பையும் ஒரு கடாயில் நெய் ஊற்றி இரண்டையும் பொன்னிறமாக வறுத்து அதை சுன்டிய பாலுடன் கலந்து, கொஞ்சம் ஏலப்பொடி கொஞ்சம் குங்கும பூ கலந்து இறக்கினால் பால் பாயசம் ரெடி