Tuesday, 18 August 2015

Poricha Rasam

Posted by : Muralidharan Varadharajan on 16/08/2015

Poricha Rasam  பொறிச்ச ரசம்
ஒரு பாத்திரத்தில் ஒரு கைபிடியளவு துவரம் பருப்பு, 4 சிவப்புமிளகாய், கொஞ்சம் மிளகு, சீரகம் தனியா போட்டு நன்றாக நிீறைய தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவைகளை தண்ணீரை வடிகட்டி போட்டு அதனுடன சிறிதளவு தேங்காய் துறுவல், கொஞ்சம் கருவேப்பிலை, 2 நறுக்கிய தக்காளி போட்டு சிறிதளவு வடிகட்டிய தண்ணீர் ஊற்றி நன்றாக வழுமென அரைத்து கௌள்ளவும்.
ஒரு பாத்திரத்தில சிறிதளவு புளி கரைசல் ஊற்றி சிறிதளவு மஞ்சள தூள், பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு, புளி வாசனை போக கொதிக்க விடவும பிறகு அதனுடன் அரைத்த கலவையை சேர்த்து, மீதம் உள்ள வடிகட்டிய தண்ணீரை தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதித்து நல்ல மணக்கும் போது அளவான உப்பு கொத்துமல்லி போட்டு இறக்கி கடுகு பெருங்காயம் தாளித்து ரசம் சாப்பிட்டால், நிச்சயமாக டம்ளரை நீட்டி குடிக்கவும் கேட்பீர்கள்

Brinjal Gotsu

Poted by  : Muralidharan Varadharajan  on 16/08/2015

Brinjal Gotsu : கத்திரிக்காய் கொத்சு
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் 5 முழு கத்திரி காயை காம்பை நீக்கி போட்டு ஒரு பிரட்டு பிரட்டி மூடி விடவும், அவ்வபொழுது கத்திரிகாயை திருப்ப்பி விடவும் பத்து நிமிடம் கழித்து இறக்கி ஆறியவுடன் கத்திரிக்காய் தோலை உறித்து நன்றாக மசித்து வைத்து கொள்ளவும்
அதே கடாயில் அரை ஸ்பூன எண்ணை ஊற்றி 5 சிவப்பு மிளகாய், கொஞ்சம தனியா , எள், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறிது வெந்தயம் போட்டு சிவக்க வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி கடுகு, பெ.ருங்ஙகாயம், கருவேப்பிலை, 2 மிளகாய் கிள்ளி போட்டு அதனுடன புளி கரைசல் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும் பிறகு மசித்த கததரிக்காயை போட்டு கிளறி அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறினால் சும்மா கம கமவென்று வாசனை மூக்கை துளைக்கும கூடவே கொத்சும் கெட்டியாக வரும் அதில கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்து இறக்கி பொங்கல், இட்லியுடன் சாப்பிடால் சீக்கிரம எல்லாம் காலி ஆயிடும்

Pottukadalai Urundai

Posted by : Muralidharan Varadharajan  on 06/08/2015

இன்ஸ்டன்ட் பொட்டுகடலை உருண்டை 5 நிமிடங்களில ::
100 கிராம் பொட்டுகடலை 100 கிராம் சர்க்கரை (ஸ்வீட் அதிகம் தேவை என்றால் 50 கிராம் அதிகம்) 25 கிராம் முந்திரி (கட்டாயம் இல்லை) 4 ஏலக்காய் எல்லாம் போட்டு மிக்ஸியில் நன்றாக மாவாக அரைத்து ஒரு அகலமான தட்டில் போட்டு அதனுடன 100கிராம் நெய்யை நன்றாக காய்ச்சி ஊற்றி இளம சூடு பதம் வந்தவுடன உருண்டைகளாக பிடிக்கவும. குழந்தைகளிடம் எல்லாவற்றையும் காட்டாதீர்கள அப்புறம் நமக்கு இருக்காது


PULI UPMA

Posted by Muralidharan Varadharajan  on 14/08/5015

புளி உப்புமா : PULI UPMA

கொஞ்சம் அரிசி மாவை புளி தண்ணீரீல் தோசைமாவு பதத்தில் கரைத்து கால் மணிநேரம் வைக்கவும  ஒரு கடாயில் கொஞ்சம் தாராளமாக நல்லெண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் அதில் கருவேப்பிலை,5 மோரமிளகாய் போட்டு சிறிது நேரம் வறுத்தவுடன் அதில கரைத்த மாவை சேர்த்து தேவையானஉப்பு போட்டு அடுப்பை மீடியம பிளேமில வைத்து கை விடாமல கிளறி கொண்டே இருக்க வேண்டும் மாவு நன்றாக வெந்து உதிர உதிராக உப்புமா பிரொவுன் கலர் வந்ததும் இறக்கி சுடசுட மோர் மிளகாயுடன் சாப்பிட்டால் ஆஹா! ஆஹா!!

Kumbakonam Arisi Upma

Posted by :  Muralidharan Varadharajan on 15/08/2015

கும்பகோணம் அரிசி ரவை உப்புமா
KUMBAKONAM ARISI RAVAI UPMA

ஒரு ஆழாக்கு பச்சை அரிசி, அரை ஆழாக்கு துவரம்பருப்பு, ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சம் மிளகு, சீரகம், பெருங்காயம் எல்லாம் மிக்ஸியில் போட்டு பெரிய ரவை மாதிரி உடைத்துகொள்ளவும்..  அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணை தாராளமாக ஊற்றி கடுகு பெ.ருங்காயம் தாளித்து, மூன்று ஆழாக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ஒரு கை பிடி தேங்காய துறுவலை போட்டு அதனுடன தேவையான உப்பு சேர்த்து உடைத்து வைத்த ரவையை போட்டு நன்றாக கட்டி தட்டாமல் ஒன்று போல் கிளறி மூடி போட்டு விசிலை போடவும், இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில வைத்து மூன்றாவது விசில் வந்ததும் இறக்கி விடவும.   பதினைந்து நிமிடம் கழித்து குக்கரைதிறந்து கிளறினால் வாசனை ஊரை கூட்டும்


கொஞ்சம் அடி பிடித்திருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை ஏனென்றால் இந்த உப்மாவில் காந்தல் தனி சுவை  உங்கள் வீட்டில் வெங்கல பானை இருந்தால் அதில் செய்தால் சுகமே சுகம் தான்  தொட்டு கொள்ள கத்திரிகாய் வெங்காய கொத்சு இருந்தால்இரட்டிப்பு சுகம்


Bitter gourd Sweet / Spicy Pachadi

Posted by : Muralidharan Varadharajan on 17/08/2015

பாவற்காய் ஸ்வீட. கார பச்சடி
3 நீள பாவற்காயை நீளவாக்கில் நறுக்கி விதைகளை எடுத்து விட்டு பாவற்காயை மிகவும் பொடி பொடி பொடீயா நறுக்கவும் ஒரு கடாயில் கொஞ்சம் ஜாஸ்தி நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும பெருங்காயம் கொஞ்சம் கடலை பருப்பு கருவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள பாவற்காயை போட்டு, பொடீயாக நறுக்கிய 2. பச்சை மிளகாயும போட்டு அரை ஸ்பூன் காரபொடி தேலையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொஞ்சம புளி கரைசல் ஊற்றி மூடி போட்டு அடுப்பை பத்து நீமிடம சிம்மில் வைத்து திறநதால் கம கம வாசனை தான் வரும் பாவற்காய் குழைந்து கண்ணுக்கு தெரீயாது அதில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து நன்றாக கரைந்து புளிகாய்ச்சசல் பதம் வந்தவுடன இறக்கி பாத்திரத்தில் எடுத்து வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால பாவற்காய் என்று தெரியாமலே மட மடவென்று சாப்பிடுவார்கள்

Apple Jam

Posted by : Narayani Harikesh
Posted on : 17/08/2015

APPLE JAM
apple 3nos,pitted dates 10nos,chinnamon powder 1tsp.Peel of the apples remove seeds and shred with grater.pressure cook it for just whistle. Meanwhile grind the pitted dates to a very fine paste.trs the cooked apple into a pan add dates paste too.cook it in a medium flame for 10mts till its thicknes.finally add chinnomon powder.then cook it for 3mts.dates as it is a natural sweetner.(very healthy)chinamon powder adds unique flavour to the jam.