Poted by : Muralidharan Varadharajan on 16/08/2015
Brinjal Gotsu : கத்திரிக்காய் கொத்சு
Brinjal Gotsu : கத்திரிக்காய் கொத்சு
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் 5 முழு கத்திரி காயை காம்பை நீக்கி போட்டு ஒரு பிரட்டு பிரட்டி மூடி விடவும், அவ்வபொழுது கத்திரிகாயை திருப்ப்பி விடவும் பத்து நிமிடம் கழித்து இறக்கி ஆறியவுடன் கத்திரிக்காய் தோலை உறித்து நன்றாக மசித்து வைத்து கொள்ளவும்
அதே கடாயில் அரை ஸ்பூன எண்ணை ஊற்றி 5 சிவப்பு மிளகாய், கொஞ்சம தனியா , எள், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறிது வெந்தயம் போட்டு சிவக்க வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி கடுகு, பெ.ருங்ஙகாயம், கருவேப்பிலை, 2 மிளகாய் கிள்ளி போட்டு அதனுடன புளி கரைசல் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும் பிறகு மசித்த கததரிக்காயை போட்டு கிளறி அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறினால் சும்மா கம கமவென்று வாசனை மூக்கை துளைக்கும கூடவே கொத்சும் கெட்டியாக வரும் அதில கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்து இறக்கி பொங்கல், இட்லியுடன் சாப்பிடால் சீக்கிரம எல்லாம் காலி ஆயிடும்