Posted by : Muralidharan Varadharajan on 16/08/2015
Poricha Rasam பொறிச்ச ரசம்
Poricha Rasam பொறிச்ச ரசம்
ஒரு பாத்திரத்தில் ஒரு கைபிடியளவு துவரம் பருப்பு, 4 சிவப்புமிளகாய், கொஞ்சம் மிளகு, சீரகம் தனியா போட்டு நன்றாக நிீறைய தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவைகளை தண்ணீரை வடிகட்டி போட்டு அதனுடன சிறிதளவு தேங்காய் துறுவல், கொஞ்சம் கருவேப்பிலை, 2 நறுக்கிய தக்காளி போட்டு சிறிதளவு வடிகட்டிய தண்ணீர் ஊற்றி நன்றாக வழுமென அரைத்து கௌள்ளவும்.
ஒரு பாத்திரத்தில சிறிதளவு புளி கரைசல் ஊற்றி சிறிதளவு மஞ்சள தூள், பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு, புளி வாசனை போக கொதிக்க விடவும பிறகு அதனுடன் அரைத்த கலவையை சேர்த்து, மீதம் உள்ள வடிகட்டிய தண்ணீரை தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதித்து நல்ல மணக்கும் போது அளவான உப்பு கொத்துமல்லி போட்டு இறக்கி கடுகு பெருங்காயம் தாளித்து ரசம் சாப்பிட்டால், நிச்சயமாக டம்ளரை நீட்டி குடிக்கவும் கேட்பீர்கள்