Kumbakonam Arisi Upma

Posted by :  Muralidharan Varadharajan on 15/08/2015

கும்பகோணம் அரிசி ரவை உப்புமா
KUMBAKONAM ARISI RAVAI UPMA

ஒரு ஆழாக்கு பச்சை அரிசி, அரை ஆழாக்கு துவரம்பருப்பு, ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சம் மிளகு, சீரகம், பெருங்காயம் எல்லாம் மிக்ஸியில் போட்டு பெரிய ரவை மாதிரி உடைத்துகொள்ளவும்..  அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணை தாராளமாக ஊற்றி கடுகு பெ.ருங்காயம் தாளித்து, மூன்று ஆழாக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ஒரு கை பிடி தேங்காய துறுவலை போட்டு அதனுடன தேவையான உப்பு சேர்த்து உடைத்து வைத்த ரவையை போட்டு நன்றாக கட்டி தட்டாமல் ஒன்று போல் கிளறி மூடி போட்டு விசிலை போடவும், இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில வைத்து மூன்றாவது விசில் வந்ததும் இறக்கி விடவும.   பதினைந்து நிமிடம் கழித்து குக்கரைதிறந்து கிளறினால் வாசனை ஊரை கூட்டும்


கொஞ்சம் அடி பிடித்திருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை ஏனென்றால் இந்த உப்மாவில் காந்தல் தனி சுவை  உங்கள் வீட்டில் வெங்கல பானை இருந்தால் அதில் செய்தால் சுகமே சுகம் தான்  தொட்டு கொள்ள கத்திரிகாய் வெங்காய கொத்சு இருந்தால்இரட்டிப்பு சுகம்