Kitchen / Cooking Tips # 34

Kitchen / Cooking Tips # 34

1. ரசம் வைக்கும் போது தேங்காய் தண்ணீரும் சேர்த்து செய்தால் ரசம் நல்ல ருசியாக இருக்கும்.

2. சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.

3. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.

4. வெண்டைக்காயயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும்.

5. ரவா தோசை மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.

6. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

7. தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.

8. பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி கார்ன் ப்ளோர் (சோள மாவு) சேர்த்து செய்தால் பூரி மிருதுவாக இருக்கும்.

9. அரைக் கிலோ ரவையை வாங்கி மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி செய்வதற்கு எளிதாக இருக்கும்.

10. ஒரு கப் கோதுமை மாவுக்கு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.