Narthangai Pachadi

Today (01/02/20174) let us learn our Traditional Pachadi which is made often at our Tambrahm houses. This is a special recipe which is made during many festivals and now a forgotten one. This is served to women, kids when they are affected with "Piththam". For people who are suffering from Indigestion or stomach ailments, this Pachadi would be a best for health sustainability.
Narthangaai Pachadi - நாரத்தங்காய் பச்சடி
தேவையானவை: நாரத்தங்காய் – ஒன்று, தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெள்ளை எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, வெல்லம் – ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, பெருங்காயம் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
Ingredients : Narthangai-1, Dhaniya-2tsp, Channa Dhal, Tur Dhall, White seasame each 1 tsp, Red Chilly - 3nos, Turmeric powder 1/2 tsp, Jaggery - 1 medium sized piece, gingelly oil 2 tsp, mustard seed - 1/2 tsp, Tamarind - 1 lemon size, soaked and squeezed, Salt - as required.
Method - செய்முறை: நாரத்தங்காயைக் நன்றாக கழுவி, தோலை தனியாக சீவி எடுத்து பொடியாக நறுக்கவும். முதலில் எள்ளை வறுக்கவும். பிறகு. தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, எள் சேர்த்து பொடி செய்யவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நாரத்தங்காயை போட்டு வதக்கவும். பிறகு புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, வறுத்த அரைத்த பொடி, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும். இது… வயிற்றுப் புரட்டல், பித்தம் ஆகியவற்றை தணிக்கும்.