Hotel Rava Kichadi

Today's 12/12/2016 Recipe
Hotel RAVA KICHADI - ஹோட்டல் ரவா கிச்சடி

Normally at home, people would hate when we make Rava Kichadhi. But this typical Hotel type kichadi has spicy flavour due to Garlic and Ginger presence, and all kids would love to have this Kichadi as it is. This was revealed by one of the master cook in Kumbakonam during our visit to a mess enroute swamimalai. Please do try at home and get us feedback.

வறுத்த ரவை 2 கப், வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்), தக்காளி 1 (தேவையானால்), பூண்டு 4 - 5 பற்கள், இஞ்சி 1 சின்ன துண்டு, பச்சை மிளகாய் 6 -8, புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ் அல்லது 2 கப் புளி ஜலம், கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.
தாளிக்க: கடுகு 1tsp, உளுந்து 1tsp, கடலை பருப்பு 1tsp, மஞ்சள் பொடி 1/2 tsp, கறிவேப்பிலை 1 கைப்பிடி, எண்ணை 3-4 tsp, நெய் 2-3 tsp.
ஒரு ஆழமான வாணலியில் ்எண்ணை மற்றும் நெய் விடவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். பூண்டு, பச்சைமிளகாய் போடவும். வெங்காயம் போடவும். நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும். நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும். கொஞ்சம் வெந்து இருக்கும். இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும். மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும். நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும். நன்கு வெந்ததும் இறக்கவும். நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார். தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும்.

Coconut chutney would be another best combination.