Today's 12/12/2016 Recipe :
NELLIKKAI RASAM - பெரிய நெல்லிக்காய் ரசம்
நெல்லிக்காய் முற்றலாக இருக்க வேண்டும். இதை அதன் மேலே இருக்கும் கோடுகளின் மீது கீறி பெயர்த்தால் கீற்று கீற்றாக நெல்லிக்காய் வந்து விடும். இதனோடு பச்சை மிளகாய், மிளகு, சீரகம், புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்தால் போதும் இதை ஆறு கப் தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ரசம் கொதித்து வரும் போது இந்த பொடியை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். (All according to your taste)
Take 2 or 3 amlas, and cut on the lines and remove the seed. Add required greenchillies, pepper, jeera, tamarind and asafoetida and coarsely grind in mixer. Add 6 cups of water and bring to boil. In a kadai, add 1 tsp of oil, saute mustard seed and methi and powder it. Add this powder to the boiling Rasam and garnish with curry leaves and celery. Your Amla rasam is ready.
நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும். பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
Nellikkai is rich in Vit C, B-Complex, Phosporus and nutritiens. Having this rasam reduces Dysentry, water related diseases, Piththam. Increases eye sight and cleans the blood. Moolam, Kabha, Cough, Cold, Vomitings and even Manjal Kamalai are also reduced.