Wednesday, 28 October 2015

Aamai Vadai

ஆம வடை :    2 கப் கடலை பருப்பு,  அரை கப் துவரம் பருப்பு  போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்,   ஊறியவுடன் நன்றாக தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு போட்டு  5/6 சிவப்பு மி ளகாய் போட்டு 2 சுத்து சுத்தி அரைத்துகொள்ளவும்.  வானலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் தட்டி எண்ணையில் போட்டு சிவக்க வறுத்து எடுத்தால் ஆமவடை ரெடி
அப்பளாம் :  வானலியில் எண்ணை வைத்து காய்ந்ததும் அப்பளத்தை  போட்டு பொறித்து எடுத்தால் அப்பளாம் ரெடி

Avial

Posted by Muralidharan Varadharajan on 27/10/2015

அவியல் :   கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சௌசௌ,   வாழைக்காய், முருங்கைகாய் எல்லாவற்றையும்  அளவாக எடுத்து 2 இன்ச் அளவில் நீளவாக்கில் நறுக்கி,  குக்கரில் போட்டு காய்கறி அளவுக்கு கீழ் தண்ணி ஊற்றி காய்கறிக்கு தேவையான உப்பு போட்டு 2 விசில்   விட்டு இறக்கவும்  முமூ தேங்காயை  துறுவி அதனுடன் 4 பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து காய்கறியுடன் போட்டு, 2 கப் கெட்டி தயிரை அப்படடியே சிலிப்பி ஊற்றி கொதி வந்ததும் கருவேப்பிலை போட்டு, சுத்தமான தேங்காய் எண்ணை கொஞ்சம் ஊற்றி கிளறி இறக்கினால் அவியல் ரெடி 

Saturday, 24 October 2015

Hotel Sambar

Please find below video link of Aaharam Recipes - Hotel Sambar


Diwali Gift Pack

Aaharam launches Deepawali Gift pack consisting of A1-Grade, purest and tastiest Cashew-nuts and with a Sweet box, in a Gift box, which is ideal for gifting near and dear. Ideal for Corporate gifts also. 

1 Pack = Rs.150/-. + Shipping from pondicherry

20 Pack = 3000/- (FREE SHIPPING)

50 Packs and above = Customised Gift Label + FREE Shipping.

Hope this Deepawali would be a Memorable with 
Aaharam Deepawali Gift Pack. 

THANK YOU ALL IN ADVANCE.


Cabbage Coconut Curry

[24/10, 5:38 AM] Muralidharan Varadharajan: 

கோஸ் தேங்காய் கறி : 

அரை கிலோ கோசை கேரட் துறு வலில் துறுவி, வானலியில் 2 டம்  ளர தண்ணீர் ஊற்றி அதில் துறுவிய கோசை போட்டு மூடி பத்து நிமிடம் வேகவைத்து வடிகட்டியில் போட்டு நன்றாக ஆற விடவும். வானலியில் சிறிது எண்ணை ஊற்றி் கடகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து அதில் கோசை போட்டு கிளறி, அரை மூடி தேங்காயை துறுவி போட்டு பிரட்டி இறக்கினால உதிர் உதிராக கோசு தேங்காய் கறி ரெடி

Curry - Potato

[23/10, 11:16 PM] Muralidharan Varadharajan: 

உருளை கார கறி  5/6 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும் , ஆறியதும் தோல் உறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும.  ஒரு வானலியில் கொஞ்சமாக எண்ணை ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை ,  உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக ரோஸ்ட் பன்னி கறிப்பொடி உப்பு  போட்டு கிளறி இறக்கினால்   உ.ருளை கார கறி ரெடி

Kosumalli

கோஸ்மல்லி  ஒரு கைபிடி பயித்தம் பருப்பை வெந்நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை நன்றாக வடிகட்டி அதில் பொடியாக நறுக்றுகிய ஒரு பச்சை மிளகாய, கொஞ்சம் துறுவிய கேரட், தேங்காய், மாங்காய், உப்பு போட்டு, கடுகு தாளித்து கலந்தால் கோஸ்மல்லி ரெடி

Posted by Muralidharan Varadharajan on 24/10/2015

Pachadi - ஸ்வீட் பச்சடி

Posted by Muralidharan Varadharajan on 24/10/2015

ஸ்வீட் பச்சடி.  

இரண்டு தக்காளியை நன்றாக தள தள வென்று கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடம் மூடி வைத்து ஆறியவுடன் தோல் உறித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும் ஒரு வானலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு  கரண்டி சர்க்கரை போட்டு நன்றாக கரைந்ததும் அரைத்த தக்காளி விழுதை போட்டு பத்து நிமிடம் கிளறி இறக்கி அதனுடன் துண்டுகளாக நறுக்கிய முந்திரி, ஆப்பிள், மலை வா ழைப்பழம, பச்சை திராட்ச்சை சேர்த்து கிளறினால் ஸ்வீட் பச்சடி ரெடி

Pachadi - தயிர் பச்சடி

Posted by Muralidharan Varadarajan
on 24/10/2015

தயிர் பச்சடி  

வெள்ளரிக்காயை தோல் சீவி துறுவி கொள்ளவும் அதனுட ன் ஒரு பெங்களூர் தக்காளியை பொடியாக நறுக்கி போட வும் மிக்ஸியில் கொஞ்சம் தேங்காய் துறுவல், ஒரு பச்சை  மிளகாய் போட்டு அரைத்து வெள்ளரியுடன் சேர்த்து புளிக்காத  கெட்டி தயிர், உப்பு கலந்து கடுகு பெருங்காயம் தாளித்து கொத்துமல்லி தூவி கலந்தால் தயிர் பச்சடி ரெடி

Paal Payasam - பால் பாயசம்

Posted by Muralidharan Varadarajan
24/10/2015

பால் பாயசம் : 

ஒரு குக்கரில் மூன்று லிட்டர் பால் ஊற்றி அதனுடன் கைபிடியளவு பாசுமதி அரிசி நன்றாக களைந்து போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் அடி பிடிக்காமல் அவ்வபொழுது கிளறி கொண்டே பால் மூன்றில் ஒரு பங்காக வரும் வரை கினறவும், பிறகு அதனுடன் கால் கிலோ சர்கரை போட்டு கரைய விடவும் பால் நன்றாக காய்ந்து வெளிர் பிரவுன் கலராக மாறியவுட.ன் அதனுடன் 150 கிராம் மிலக்மெய்டு ஊற்றி நன்றாக கலந்து இறக்கி விடவும்
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பத்து பாதம் பருப்பை போட்டு 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி பருப்பு ஆறியவுடன தோலn் உறித்து நீளவாக்கில் துண்டுகளாக ந றுக்கி, நூறு கிராம் இரண்டாக உடைத்த முந்திரி பருப்பையும் ஒரு கடாயில் நெய் ஊற்றி இரண்டையும் பொன்னிறமாக வறுத்து அதை சுன்டிய பாலுடன் கலந்து, கொஞ்சம் ஏலப்பொடி கொஞ்சம் குங்கும பூ கலந்து  இறக்கினால் பால் பாயசம் ரெடி

Wednesday, 16 September 2015

Navarathri Gift Pack

Navarathiri Gift Pack.....!!!!!!

Navarathri Gift Pack of Aaharam Products ready..
Celebrate this Navarathiri with gifting Sumangalis with this Gift Pack
Contains 10 Aaharam Products.
Rate : Rs. 99/- per pack.
MoQ = 10 Packs
Shipment Free within Tamilnadu
Outstation orders Actual Shipment charges via DTDC
Send your orders to aaharamsales@gmail.com with your 
Name, Address, Mobile #, Required quantity along with payment...


Wednesday, 9 September 2015

Aaharam Family Pack @ 990/-

Aaharam Family Pack is now available for shipping...
1. Sambar Powder 250 gms
2. Rasam Powder 250 gms
3. Idly Chilly Powder 200 gms
4. Turmeric Powder 100 gms
5. Red Chilly (Special) powder 100 gms
6. Curry leaves Powder 100 gms
7. Paruppu Podi / Kaluthu Podi : 100 gms
8. Ready mix Pudilodharai 100 gms
9. Angaya Podi 100 gm
10. Aaharam Cofeee Powder 250 gms
The total cost for all the above products including Shipment charges all over India would be Rs. 990/- only. So its easy for Aaharians to book Aaharam Family Pack (AFP) and get monthly shipment with special packings..... Happy & Healthy Living at Aaharam.... with Cent Percent Quality Products from Aaharam......

Tuesday, 18 August 2015

Poricha Rasam

Posted by : Muralidharan Varadharajan on 16/08/2015

Poricha Rasam  பொறிச்ச ரசம்
ஒரு பாத்திரத்தில் ஒரு கைபிடியளவு துவரம் பருப்பு, 4 சிவப்புமிளகாய், கொஞ்சம் மிளகு, சீரகம் தனியா போட்டு நன்றாக நிீறைய தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவைகளை தண்ணீரை வடிகட்டி போட்டு அதனுடன சிறிதளவு தேங்காய் துறுவல், கொஞ்சம் கருவேப்பிலை, 2 நறுக்கிய தக்காளி போட்டு சிறிதளவு வடிகட்டிய தண்ணீர் ஊற்றி நன்றாக வழுமென அரைத்து கௌள்ளவும்.
ஒரு பாத்திரத்தில சிறிதளவு புளி கரைசல் ஊற்றி சிறிதளவு மஞ்சள தூள், பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு, புளி வாசனை போக கொதிக்க விடவும பிறகு அதனுடன் அரைத்த கலவையை சேர்த்து, மீதம் உள்ள வடிகட்டிய தண்ணீரை தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதித்து நல்ல மணக்கும் போது அளவான உப்பு கொத்துமல்லி போட்டு இறக்கி கடுகு பெருங்காயம் தாளித்து ரசம் சாப்பிட்டால், நிச்சயமாக டம்ளரை நீட்டி குடிக்கவும் கேட்பீர்கள்

Brinjal Gotsu

Poted by  : Muralidharan Varadharajan  on 16/08/2015

Brinjal Gotsu : கத்திரிக்காய் கொத்சு
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் 5 முழு கத்திரி காயை காம்பை நீக்கி போட்டு ஒரு பிரட்டு பிரட்டி மூடி விடவும், அவ்வபொழுது கத்திரிகாயை திருப்ப்பி விடவும் பத்து நிமிடம் கழித்து இறக்கி ஆறியவுடன் கத்திரிக்காய் தோலை உறித்து நன்றாக மசித்து வைத்து கொள்ளவும்
அதே கடாயில் அரை ஸ்பூன எண்ணை ஊற்றி 5 சிவப்பு மிளகாய், கொஞ்சம தனியா , எள், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறிது வெந்தயம் போட்டு சிவக்க வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி கடுகு, பெ.ருங்ஙகாயம், கருவேப்பிலை, 2 மிளகாய் கிள்ளி போட்டு அதனுடன புளி கரைசல் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும் பிறகு மசித்த கததரிக்காயை போட்டு கிளறி அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறினால் சும்மா கம கமவென்று வாசனை மூக்கை துளைக்கும கூடவே கொத்சும் கெட்டியாக வரும் அதில கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்து இறக்கி பொங்கல், இட்லியுடன் சாப்பிடால் சீக்கிரம எல்லாம் காலி ஆயிடும்

Pottukadalai Urundai

Posted by : Muralidharan Varadharajan  on 06/08/2015

இன்ஸ்டன்ட் பொட்டுகடலை உருண்டை 5 நிமிடங்களில ::
100 கிராம் பொட்டுகடலை 100 கிராம் சர்க்கரை (ஸ்வீட் அதிகம் தேவை என்றால் 50 கிராம் அதிகம்) 25 கிராம் முந்திரி (கட்டாயம் இல்லை) 4 ஏலக்காய் எல்லாம் போட்டு மிக்ஸியில் நன்றாக மாவாக அரைத்து ஒரு அகலமான தட்டில் போட்டு அதனுடன 100கிராம் நெய்யை நன்றாக காய்ச்சி ஊற்றி இளம சூடு பதம் வந்தவுடன உருண்டைகளாக பிடிக்கவும. குழந்தைகளிடம் எல்லாவற்றையும் காட்டாதீர்கள அப்புறம் நமக்கு இருக்காது


PULI UPMA

Posted by Muralidharan Varadharajan  on 14/08/5015

புளி உப்புமா : PULI UPMA

கொஞ்சம் அரிசி மாவை புளி தண்ணீரீல் தோசைமாவு பதத்தில் கரைத்து கால் மணிநேரம் வைக்கவும  ஒரு கடாயில் கொஞ்சம் தாராளமாக நல்லெண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் அதில் கருவேப்பிலை,5 மோரமிளகாய் போட்டு சிறிது நேரம் வறுத்தவுடன் அதில கரைத்த மாவை சேர்த்து தேவையானஉப்பு போட்டு அடுப்பை மீடியம பிளேமில வைத்து கை விடாமல கிளறி கொண்டே இருக்க வேண்டும் மாவு நன்றாக வெந்து உதிர உதிராக உப்புமா பிரொவுன் கலர் வந்ததும் இறக்கி சுடசுட மோர் மிளகாயுடன் சாப்பிட்டால் ஆஹா! ஆஹா!!

Kumbakonam Arisi Upma

Posted by :  Muralidharan Varadharajan on 15/08/2015

கும்பகோணம் அரிசி ரவை உப்புமா
KUMBAKONAM ARISI RAVAI UPMA

ஒரு ஆழாக்கு பச்சை அரிசி, அரை ஆழாக்கு துவரம்பருப்பு, ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சம் மிளகு, சீரகம், பெருங்காயம் எல்லாம் மிக்ஸியில் போட்டு பெரிய ரவை மாதிரி உடைத்துகொள்ளவும்..  அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணை தாராளமாக ஊற்றி கடுகு பெ.ருங்காயம் தாளித்து, மூன்று ஆழாக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ஒரு கை பிடி தேங்காய துறுவலை போட்டு அதனுடன தேவையான உப்பு சேர்த்து உடைத்து வைத்த ரவையை போட்டு நன்றாக கட்டி தட்டாமல் ஒன்று போல் கிளறி மூடி போட்டு விசிலை போடவும், இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில வைத்து மூன்றாவது விசில் வந்ததும் இறக்கி விடவும.   பதினைந்து நிமிடம் கழித்து குக்கரைதிறந்து கிளறினால் வாசனை ஊரை கூட்டும்


கொஞ்சம் அடி பிடித்திருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை ஏனென்றால் இந்த உப்மாவில் காந்தல் தனி சுவை  உங்கள் வீட்டில் வெங்கல பானை இருந்தால் அதில் செய்தால் சுகமே சுகம் தான்  தொட்டு கொள்ள கத்திரிகாய் வெங்காய கொத்சு இருந்தால்இரட்டிப்பு சுகம்


Bitter gourd Sweet / Spicy Pachadi

Posted by : Muralidharan Varadharajan on 17/08/2015

பாவற்காய் ஸ்வீட. கார பச்சடி
3 நீள பாவற்காயை நீளவாக்கில் நறுக்கி விதைகளை எடுத்து விட்டு பாவற்காயை மிகவும் பொடி பொடி பொடீயா நறுக்கவும் ஒரு கடாயில் கொஞ்சம் ஜாஸ்தி நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும பெருங்காயம் கொஞ்சம் கடலை பருப்பு கருவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள பாவற்காயை போட்டு, பொடீயாக நறுக்கிய 2. பச்சை மிளகாயும போட்டு அரை ஸ்பூன் காரபொடி தேலையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொஞ்சம புளி கரைசல் ஊற்றி மூடி போட்டு அடுப்பை பத்து நீமிடம சிம்மில் வைத்து திறநதால் கம கம வாசனை தான் வரும் பாவற்காய் குழைந்து கண்ணுக்கு தெரீயாது அதில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து நன்றாக கரைந்து புளிகாய்ச்சசல் பதம் வந்தவுடன இறக்கி பாத்திரத்தில் எடுத்து வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால பாவற்காய் என்று தெரியாமலே மட மடவென்று சாப்பிடுவார்கள்

Apple Jam

Posted by : Narayani Harikesh
Posted on : 17/08/2015

APPLE JAM
apple 3nos,pitted dates 10nos,chinnamon powder 1tsp.Peel of the apples remove seeds and shred with grater.pressure cook it for just whistle. Meanwhile grind the pitted dates to a very fine paste.trs the cooked apple into a pan add dates paste too.cook it in a medium flame for 10mts till its thicknes.finally add chinnomon powder.then cook it for 3mts.dates as it is a natural sweetner.(very healthy)chinamon powder adds unique flavour to the jam.


Monday, 20 July 2015

FSSAI

FSSAI Registration Certificate for Aaharam Products