அம்மாளம் : நீ இந்த மசாலா வடைய ஒரு நாலு வாங்கிண்டு.. நன்னா உதிர்த்து வச்சுக்கோ... ஒரு 2 வெங்காயம், தக்காளி நன்னா பொடிசா நறுக்கி... 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு 2 பட்டை, 2 கிராம்பு, 1 ஏலக்காய் வதக்கிண்டு... இந்த வெங்காயம் தக்காளி போட்டு நன்னா வதக்கு... வெந்தவொடனே.... உதிர்த்து வச்ச அந்த வடைய போட்டு நன்னா வதக்கு... கொஞ்சம் உப்ப போட்டுக்கோ... 1/2 டீஸ்பூன் மஞ்சப்பொடி, மொளகாப்பொடி, ஜீரகப்பொடி எல்லாத்தையும் போட்டுண்டு... வத்துக்கு.... 1/2 டம்பளர் .. பசும்பாலை அதுல விட்டு... தேவையான ஜலம் வீட்டுக்கோ.... அப்படியே மீடியம் ஆ வச்சு.... நன்னா வெந்தப்பறம்... நறுக்கி வச்சு இருக்கிற கொத்தமல்லி தழைய போட்டு... சூடா செட் தோசையோட எடுத்துண்டு வா.... நன்னா சாப்பிட்டு ரொம்பநாளாச்சு........ போ போ.... சீக்கிரம் பண்ணு... நாழியாரது.... பசிக்கிறது வேற..