Kitchen Tips # 21

Kitchen Tips # 21
Posted by Swaminatha Sharma on 28/02/2016

1. ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும். Add 1tsp of Pepper and Dhaniya dry roasted and powdered in Puli-kaaichal, which gives good aroma and taste.

2. ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். Upma will be tasty and awesome if we add 1/2 water and 1/2 Coconut milk or Milk to it.

3. மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம். The exact time of soaking for Urud-dal vada would be for 30 mins where half is good soaked and half will be half soaked.

4. பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும். To remove the Kasappu from Bittergourd, just cut to pieces, add salt and keep aside for 10 mins. Then soak in Tamarind Water for 10 mins, will reduce the maxikum bitterness from it.

5. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும். Adding Coconut water to Rasam will enhance the taste of the rasam.