Cooking Tips # 11

Cooking / Samayal tips # 11 (30/01/2015)

1. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை வேக வைக்கும்பொழுது, கூட ஒரு துண்டு எலுமிச்சை சேர்த்து வேக வைத்தால் நிறமும் மாறாது, சுவையும் கூடும்.
While cooking Cabbage / Cauliflower in hot water, just add a piece of lemon, which restores the colour and flavour of the veggies

2. கார வகைகள் செய்யும்பொழுது வெண்ணெய்யும், ஸ்வீட் வகைகளுக்குச் சுத்தமான நெய்யும் சேர்த்துச் செய்தால் மிக மிகச் சுவையாக இருப்பதோடு, அதிக நாள் கெடாமலும் இருக்கும்.
Add Butter for savories and Ghee to Sweets. This gives good taste and can be stored for longer days...

3. கார வகைகளுக்கு மாவு பிசையும்பொழுது ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துப் பிசைந்தால் தேங்காய் எண்ணெய்யில் செய்தவை போலச் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
While making savories with flours, add a cup of Coconut milk, which gives good aroma and taste and will taste us as if made in coconut oil.

4. தனியாவையும், தேங்காயையும் சிறிது வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொணடு தேவையானபொழுது சாம்பாரில் போட, சாம்பார் மணக்கும்.
Dry roast Dhaniya and Coconut and grind to powder and keep ready always... Sprinkle 1 tsp of this powder in Sambar, which gives good aroma and taste.

5. பூரி - கிழங்கு, காய்கறிக் குருமா செய்யும்பொழுது வெங்காயம் போதாமல் போய்விட்டால் கவலை வேண்டாம்! முழுவதும் வெங்காயம் போடுவதற்குப் பதிலாக முட்டைக்கோசையும், வெங்காயத்துடன் கலந்து போட்டால் சிறிதும் வித்தியாசம் தெரியாது.
No worries on shortage of onion during Kurma / Potato masala. Just chop cabbage and add with little onion, gives same taste too....