Iniya kaalai vanakkathudan ungal Sharma-vin indraya samayal 02/04/2015 Tirunelveli Sodhi..... This is a side used for many dosa, idli, rice varieties and a recipe used in Chettinad / Tirunelveli side with many vegetables.. Let us see how to prepare this Sodhi as I have posted in Tamil for clear understanding of the recipe (Hope some one would translate for the benefit of others)...
திருநெல்வேலி சொதி.!.
கேரட் - 1, உருளைக்கிழங்கு - 1, பீன்ஸ் - 10 பச்சைபட்டாணி - 1/4 கப், கத்திரிக்காய் - 2, முருங்கைக்காய் - 1, வெங்காயம் - 2, இஞ்சி - 2 இன்ச், பூண்டு - 5 பற்கள், பச்சை மிளகாய் - 5, தேங்காய் - 1/2 மூடி (துருவியது), பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிது, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை:- முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்து, 1 கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, 1 கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் இஞ்சி, பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, மிஞ்சுள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, 10 நிமிடம் காய்கறிகளை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து, முதல் தேங்காய் பாலை ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால், திருநெல்வேலி சொதி ரெடி.