Posted by Muralidharan Varadharan on 08/10/2015
ஹைடெக் கஞ்சி
ஒரு மணி நேரம் முன்னாடி 10 பாதம் பருப்பு, 10 முந்திரி பருப்பு, 10 ஸீட் லெஸ் பேரீட்சம் பழம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொஞ்சம் கொப்பரை தேங்காய் அல்லது தேங்காய் துறுவல் சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும,
குக்கரில் அரை லிட்டர் பால் ஊற்றி அதில் ஒரு கப் பயித்தம் பருப்பை களைந்து போட்டு கொஞ்சம் தண்ணீரும் ஊற்றி நாலு விசில் விட்டு இறக்கவும.
ஒரு பாத்திரத்தில் இனிப்பு தேவையான அளவு வெல்லம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைந்ததும் வடிகட்டி அதனுடன் வெந்த பருப்பு, அரைத்த விழுது எல்லாம் சேர்த்து கஞ்சி பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாக. கிளறி கொதித்து வாசனை வரும் போது ஏலப்பொடி போட்டு இறக்கினால் சுவையான, சத்து மிகுந்த, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ரசித்து குடிக்ககூடிய ஹைடெக் கஞ்சி ரெடி