Mysore Rasam - மைசூர் ரசம்

Posted by Muralidharan Varadharajan on 17/11/2015

மைசூர் ரசம் 

குக்கரில் ஒரு கப் துவரம் பருப்பை போட்டு சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு 4 டம்பளர் தண்ணீர் ஊற்றி மூடி 4. விசில் வந்தததும் இறக்கிவிடவும்.  ஒரு எலுமிச்சைபழம் அளவு புளியில் 5 டம்பளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஊறியதும் நன்றாக கரைத்து பில்டர் பண்ணி அந்த புளி கரைசலில் 4 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, 2 ஸ்பூன் சாம்பார்பொடி, சிறிதளவு மஞ்சள்பொடி, சற்று தூக்கலாக பெருங்காய பவுடர சேர்த்து நன்றாக புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.  ஒரு கடாயில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் கைபிடியளவு துவரம்பருப்பு, 6 சிவப்புமிளகாய், கொஞ்சம் மிளகு கொஞ்சம் சீரகம் சிறிய கட்டி பெருங்காயம், கொஞ்சம் தனியா எஎல்லாம் போட்டு நன்றாக வருத்து இறக்கும் போது கால் மூடி துறுவிய தேங்காய் சேர்த்து ஒரு பிர்ட்டுபிரட்டி இறக்கி ஆறியதும் மமிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொதிக்கும் புளி கரைசலுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.  ஓரளவு கொதித்ததும் வெந்த பருப்பையும் சேர்த்து ரசம் பதத்திற்கு தண்ணீர் விட்டு நுரைத்து வ ந்ததும பொடியாக நறுக்கிய. கொத்துமல்லி சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு இறக்கி அதில் கடுகு தாளித்து போட்டால் வீடே ரச வாசனை வீசும.  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன ரசம் என்று கூறிக்கொண்டே உங்கள் சமையல் அறைக்கே வந்தால் என்னை நினைத்து நீங்கள் பெறுமைபட்டு கௌள்ளவும்.