Milagu Kuzhambu - மிளகு குழம்பு

Posted by Muralidharan Varadharajan  @ Aaharam Group

மிளகு குழம்பு

ஒரு வானலியில் இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி ஒரு சின்ன கரண்டி உளுத்தம் பருப்பு, கொஞ்சமாக வாசனைக்கு துவரம் பருப்ப, கடலை பருப்பு, 4/5 மிளகாய், 4/5 ஸ்பூன் மிளகு-1 ஸ்பூன சீரகம், அடுத்து அடுத்து ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வறுத்து கடைசியில் கொஞ்சம் கருவேப்பிலை , கொஞ்சம் பெருங்காயம் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் எலுமிச்சை அளவு புளியை பிய்த்து போட்டு, கொஞ்சமாக தேங்காய் துறுவல் சேர்த்து தண்ணீர ஊற்றி நன்றாக வழுமென அரைத்து கொள்ளவும. 

ஒரு வானலயில் சின்ன கரண்டி நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கொஞ்சம் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு பிரட்டி அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு தேவையான அளவு உப்பும், தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும. கொதிக்கும் போதே வாசனை கம கமவென்று ஊரை கூட்டும் ஒரளவு திக்கான பதம் வந்ததும் இறக்கினால் சுவைபான மருத்துவ குணம் கொண்ட மிளகு குழம்பு ரெடி. இதை 2/3 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.