Health Tips # 1

இடைவிடாத இருமலுக்கு: அதிமதுரத்தை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

தாது விருத்திக்கு: உடல் வலிமைக்கும் தாது விருத்திக்கும் முருங்கைப்பூ நல்லது. தினமும் இரவில் படுக்க செல்லும் முன் பசும்பாலில் முருங்கைப் பூவைப் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைப்புண் ஆற: இலந்தை இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதில் உப்பு போட்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும்.

வயிற்றில் பூச்சி போக: மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி வெளியேறிவிடும்
.
குளவி கொட்டினால்: குளவி கொட்டினால் அந்த இடத்தில் ஒரு வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் வீக்கம் வராது. வலியும் போய்விடும்.

சேற்றுப் புண் போக: இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது அந்த மாவை கொஞ்சம் எடுத்து அதில் எலுமிச்சம் சாறு சேர்த்து புண்ணில் தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.

விக்கல் நிற்க: விடாமல் விக்கல் எடுக்கிறதா? கடுக்காய் தோலை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் பொடியை தேனில் கலக்கி சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

போதை தெளிய: அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருப்பவர்களுக்கு மாதுளம்சாறு ஒரு டம்ளர் கொடுத்தால் போதும். விரைவில் போதை தெளியும்.

பல் வலி போக: பலி வலியை உடனடியாக போக்க ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருங்கள். வலி போனதும் பல் டாக்டரை பார்த்து நிரந்தர தீர்வு காணுங்கள்.

தூக்கம் வருவதற்கு: ஒரு வெங்காயத்தை எடுத்து கண்ணீல் சாற்றை பிழியுங்கள். கண்ணீர் வந்து அடங்கியதும் தூக்கம் தானாக வரும்.