1. வறுத்த தேங்காய்த் துருவல் ஒரு கப், ஏலக்காய் ஐந்து இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் வறுத்த சேமியாவை பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரித் துண்டுகளையும் சேர்த்து ஒரு டப்பாவில் கலந்து வைத்துக்கொள்ளவும். திடீரென விருந்தாளி அல்லது விசேஷம் என்றால், இக்கலவையில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டு வெந்நீர் விட்டு, சூடான பாலும், ஒரு தேக்கரண்டி நெய்யும் விட்டுக் கலந்தால் இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி.
2. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்.
3. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்,
4. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.
5. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.