Aval - Javvarisi Pongal

Recipe : Aval Javarisi Pongal
Shared by : Shreenivas Balaji
Date : 01/12/2014

அவல் ஜவ்வரிசி பொங்கல் 
• அவல்-1கப்
• ஜவ்வரிசி-1கப்
• பாசிபருப்பு-அரைகப்
• தேங்காய் துருவியது-அரை கப்
• நெய்-5ஸ்பூன்
• முந்திரி பருப்பு-அவரவர் விருப்பம்
• உப்பு-தேவையான அளவு
• தாளிக்க தேவையான பொருட்கள்
• கடுகு-அரை ஸ்பூன்
• ஜீரகம்-1ஸ்பூன்
• மிளகு-1ஸ்பூன்
• பச்சைமிளகாய்-2
• கறிவேப்பிலை-சிறிது
• துருவிய இஞ்சி-சிறிது

செய்முறை
• பாசிபருப்பை வேக வைத்துகொள்ளவும். 
• ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
• அவலை கழுவி நீரை வடித்து ஊறவைத்துகொள்ளவும்.
• அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துகொள்ளவும்.
• மீதமுள்ள நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும்.
• அது வதங்கியதும் வேகவைத்த பாசிபருப்பு, ஊறவைத்த ஜவ்வரிசி,அவல் இவற்றை போட்டு நன்கு கிளறவும்.
• கடைசியில் துருவிய தேங்காயை போட்டு நன்கு கிளறி இறக்கவும். 
• அதில் வறுத்த முந்திரியை அலங்கரிக்கவும்.


Comments