Methi Mutiya - வெந்தயக்கீரை முட்டியா

Recipe : Fenugreek (Methi) Mutiya - வெந்தயக்கீரை முட்டியா
(This is a Gujarathi dish)
shared by : Annapoorani Ganesan
Date : 04/12/2014

Ingredients : தேவையான பொருட்கள்
1/2கப் கோரகொரப்பன கோதுமை மாவு
1/2கப் கடலை மாவு 
1/4கப் ரவை
1கப் வெந்தயக்கீரை
1டி ஸ்பூன் துருவிய இஞ்சி, 1/2ஸ்பூன் எள்ளு,1/2 ஸ்பூன் ஓமம்
1/2டி ஸ்பூன் மிளகாய் பொடி
1டி ஸ்பூன் தனிய பொடி
1/4டி ஸ்பூன் மஞ்சள் பொடி
1டேபிள் ஸ்பூன் தயிர்
1டி ஸ்பூன் சர்கரை அல்லது வெல்லம்
ருசிக்கு ஏற்ப உப்பு
Preparation : செய்முறை
எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து ரொட்டி மாவு பெசைவது போல் பெசயவும், பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக்கி பிறகு நீளவாக்கில் (ஓவல்) சீப்பி போடுவது போல் செய்துகொள்ளவும்.  பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்ததும் நாலு நாலாக பொறித்து எடுத்து டிஷு பேப்பரில் வடிய வைத்து எடுக்கவும்
மேத்தி கீ முட்டியா (வெந்தயகீரை முட்டியா) தயார் .  இதை தக்காளி சாஸ் அல்லது எதாவது சட்னியுடன் சாப்பிடலாம் 

Preparation method-2 : செய்முறை 2
இதையே என்னை இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் மேற்படி செய்முறையில் நீளவாக்கில் உருட்டி அதை வேண்டுமானால் பாதியாக வெட்டி ஆவியின் வைத்து எடுத்து பிறகு ஒரு கடையில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதி 1ஸ்பூன் சீரகம், 1ஸ்பூன் எள்ளு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து அதில் ஆவியில் வைத்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் வறுத்து இறக்கவும்.  சுவையான வெந்தயக்கீரை முட்டியா தயார்.

Comments