ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு
Iyengar Style Vendhaya Kuzhambu
Ingredients தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு… மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 5 எண்ணெய் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1 பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
Preparation Method : செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதே நேரம் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பிறக அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதற்குள் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!

Comments
Post a Comment