Vendakkai Karamathu

Recipe : வெண்டைக்காய் புளிப்பு கரமது
Dated " 22/11/2014

தேவையான பொருட்கள்
1. வெண்டைக்காய் – 10
2. கடுகு – ½ தே.க
3. புளி – நெல்லிக்காய் அளவு
4. வெந்தயம் – ½ தே.க
5. சிவந்த மிளகாய் – 3
6. கடலை பருப்பு - ½ தே.க
7. உளுத்தம் பருப்பு - ½ தே.க
8. உப்பு – தேவைக்கேற்ப்ப
9. எண்ணைய் – 2 தே.க
10. பெருங்காயம் – 1 சிட்டிகை
11. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
12. கருவேப்பிலை – 10 இலைகள்
செய்முறை
வெண்டைக்காயை நன்கு அலம்பி துணியில் துடைத்து எடுக்கவும். ½ இன்சு துண்டுகளாக திருத்தி கொள்ளவும். புளியை 1 டம்பலர் தண்ணீரில் ஊரவைக்கவும். வானலியில் 2 தே.க எண்ணைய் வைத்து கடுகு, வெந்தயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவந்த மிளகாய், கருவேப்பிலை திருமாறவும். பிறகு திருத்திய வெண்டைக்காயை போட்டு 3 – 5 நிமிடம் வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், பெருங்காயம் உப்பு சேர்த்து ஒரு கிளரு கிளரி புளி கரைசலை விடவும். அடுப்பை சிறிய தீயில் வைத்து 15 – 20 நிமிடம் கொதிக்க விடவும். வெண்டைக்காய் புளிப்பு கரமது தயார். இது சாதம், சப்பாத்தி மற்றும் தோசைக்கு மிகவும் பொருந்தும்.


Comments