Cooking Tips-6

Samayal Tips # 6 (11/01/2015)
1. ஜிலேபி அல்வா செய்யும் போது கேசரி பவுடர் க்கு பதிலாக, காரட் சாறு எடுத்து பாகில் கலந்தால் சுவையாக இருக்கும்.
2. சேமியா, அவல், ரவா கேசரி செய்யும் போது அதில் வெள்ளரி விதை சேர்த்தால் அதிக சுவையோடு இருக்கும்.
3. புளி அவல் செய்யும்போது, 4 ஸ்பூன் புளியோதரை மிக்ஸ் 1/2 டம்ளர் தண்ணியில் கரைத்து அவலின் மேல் தெளித்து, பிசிறி 1/2 மணி நேரம் ஊறவைத்து தாளித்த்தால், வேலை மிகவும் சுலபம், ருசியும் அபாரம்.
4. தோசை மாவில் நூடுல்ஸ் ஒடித்து போட்டு கலந்து தோசை செய்தால், குழந்தைகள் ஆஹா நூடுல்ஸ் தோசை அண்ட் விரும்பி சாப்பிடுவார்கள்..
5. கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, அதிகம் வெந்து விட்டால், சொப்பு செய்வது ஓரங்களில் விரிந்து போகும். இத்துடன், சிறிது மைதா மாவு சிறிது கலந்து செய்தால், அழகாக, விரியாமல் வரும்.

Comments