Samayal Tips-7

Samayal Tips # 7 (15/01/2015)
1. உளுந்து வடை மாவு ரொம்ப நீர்த்துப்போய் விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து வடை தட்டினால் வடை சுவையாக இருக்கும். (When the batter for Urud Dal Vadai is Watery, add Aval and make vadai)
2. பனீரை வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பனீரை வெட்டினால் உடையாமல் உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும். (If you want to cut panner without pieces, Cut with a hot knife immersed in hot water)
3. பருப்புடன் சிறிது எண்ணெயும், சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும். (If you want Dal to be cooked well, add few drops of Oil and Asafoetida in the dal and pressure cook it)
4. தேயிலைத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப் போட்டு கலக்கிவிட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும். (While transferring tea powder in a container, add 2 or 3 powdered cardamom with tea and store it, which tastes good)
5. இட்லிப்பொடி செய்யும்பொழுது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால் பொடி ருசியாக இருக்கும். (While grinding Idli Chilly powder, add few dried curry leaves, which gives yummy taste)

Comments